சென்னை தமிழக அமைச்சர் சாமிநாதன் கருணாநிதி நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட அரசாணையை ராஜத்தி அம்மாளிடம் வழங்கி உள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 188 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 15.32 கோடி நூலுரிமைத் தொகை தமிழக அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. […]