மாணவர் கண்டுபிடித்த ட்ரோன் – காப்டர்: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த பள்ளி மாணவர் மெத்​னேஷ் திரிவேதி. இவர் 3 மாதங்கள் கடினமாக உழைத்து ஒரு ட்ரோனை உருவாக்கி உள்ளார். ஹெலி​காப்டர் போன்று இந்த ட்ரோன் – காப்​டரில் 80 கிலோ எடை கொண்ட ஒருவர் பறந்து செல்ல முடி​யும். ஆறு நிமிடங்கள் வரை பறக்​கும் திறனுடன் இதை வடிவ​மைத்​துள்ளார்.

இதுகுறித்து பிரபல தொழில​திபர் ஆனந்த் மஹிந்​திரா சமூக வலைதளத்​தில் வெளி​யிட்ட பதிவில், ‘‘திரிவே​தி​யின் ட்ரோன் புது​மை​யைப் பற்றியது அல்ல. இணையதளத்​தில் இயந்​திரத்தை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ள முடி​யும். ஆனால், இது இயந்​திர​வியலில் திரிவே​திக்கு உள்ள ஆர்வம், அர்ப்​பணிப்புப் பற்றியது. இந்த இயந்​திரத்தை செய்து முடிக்க வேண்​டும் என்ற அவரது பொறுமையை பற்றியது. இவரைப் போன்ற இளைஞர்​களின் எண்ணிக்கை நாட்​டில் அதிகரிக்​கும்போது, அந்தளவுக்கு நமது நாடும் புது​மை​யானதாக மாறும்’’ என்று பாராட்டு தெரி​வித்​துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.