BSNL Best Broadband Plan: பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சமீப காலங்களில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி, சிறப்பான சேவையை வழங்குவதால் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நோக்கி தற்போது படையெடுக்க தொடங்கி உள்ளனர். பிற நிறுவனங்களில் இருந்து தங்களின் மொபைல் நம்பரை பிஎஸ்என்எல் நொட்வோர்க்கிற்கு மாற்றியுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் 5ஜி சேவையை தொடங்கவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டவர்களை நிறுவவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அப்படியிருக்க இந்த சிறப்பான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டேட்டா திட்டம் குறித்து வாடிக்கையாளர்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதிகரிக்கும் டேட்டா தேவை
தற்போதைய சூழலில் டேட்டா என்பதே அனைவருக்கும் பிரதானமாக உள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் என பல சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டா தேவைப்படுகிறது. எனவே, பலரும் தங்களுக்கு அதிக டேட்டா பலன்களை கொடுக்கும் திட்டங்களையே தேர்வு செய்கின்றனர். ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் நீங்கள் தினமும் 2ஜிபி டேட்டாவை தரும் பிளான்களை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே 5ஜி இணைய சேவை வரம்பற்ற வகையில் கொடுக்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனமும் 5ஜி இணைய சேவையில் தொடக்கக் கட்டத்தில்தான் இருக்கிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவையைதான் தற்போது விரிவுப்படுத்தி வருகிறது. அப்படியிருக்க, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வரம்பற்ற 5ஜி சேவையை அளித்தாலும் அதன் விலை பெரும்பாலனோரின் பட்ஜெட்டில் இருப்பதில்லை. இதனால் வீட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் பிராட்பிராண்ட் சேவைகளையும் பயன்படுத்துகின்றனர்.
பிஎஸ்என்எல் பிராட்பிராண்ட்
ஜியோ நிறுவனம் Jio Fiber, ஏர்டெல் நிறுவனம் Airtel Extreme போன்ற இணைய சேவைகளையும் வழங்கி வருகின்றன. இதுபோக தனியார் நிறுவனங்களும் பிராண்ட் சேவையை வழங்கி வருகின்றன. அப்படியிருக்க அதிக டேட்டா பலன்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிராட்பிராண்ட் ரீசார்ஜ் திட்டத்தை தெரிந்துகொள்வது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும்.
அதுவும் வீட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த பிராண்ட்பேண்ட் திட்டங்களை வழங்குவதில் மற்ற நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் முன்னணியில் இருக்கிறது. பிரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை போல பிராட்பிராண்டிலும் குறைந்த விலையில் தரமான இணைய சேவையை வழங்கிவருகிறது.
ரூ.2799 பிஎஸ்என்எல் பிராட்பிராண்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், ஒரு மாதத்திற்கு 5000ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது, 300Mbps வேகத்தில் இந்த சேவை வழங்குகிறது. இந்த டேட்டா தீர்ந்துவிட்ட பின்னர், 30Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை பெறலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை 2,799 ரூபாய் ஆகும்.
இந்த திட்டத்தின்கீழ் பல ஓடிடி தளங்களும் இலவசமாக கிடைக்கிறது. குறிப்பாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5 பிரீமியம், Sony Live பிரீமியம், Voot, Hungama, Lions Gate, Yupp TV போன்ற போன்ற ஓடிடியை நீங்கள் கண்டுகளிக்கலாம்.