4வது டெஸ்டில் ரோஹித் விலகல்! மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்ஸிங் டேட் டெஸ்ட் போட்டியாக இது நடைபெற உள்ளதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பயிற்சி அமர்வின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. பந்து ரோகித் சர்மாவின் முழங்காலில் பட்டதால் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின்பு பிசியாவின் உதவியுடன் மீண்டும் பேட்டிங் செய்ய முயன்றார். ஆனாலும் காயத்தால் அவதிப்பட்டார்.

பின்பு ரோகித் சர்மாவுக்கு காலில் ஐஸ் பேக் கொடுக்கப்பட்டு, அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தார். இருப்பினும் இது எவ்வளவு பெரிய காயம் என்பது குறித்தான அப்டேட்கள் எதுவும் இல்லை. ஒருவேளை காயம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் ரோஹித் சர்மாவின் காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று தொடர் சம நிலையில் உள்ளது, ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

BIG RELIEF

Captain Rohit Sharma got hit at his left knee during nets but is fine now. pic.twitter.com/2C9ams7l1s

— Vishal. (@SPORTYVISHAL) December 22, 2024

பயிற்சி முடிந்த பின்பு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரோகித் சர்மாவின் காயம் குறித்து கேட்கப்பட்டது. “கிரிக்கெட் விளையாடும் போது இது போன்ற காயங்கள் ஏற்படுவது சகஜம்தான். இதற்கு வீரர்கள் தயாராகவே இருப்பார்கள், ரோகித் சர்மாவை பற்றி கவலைப்பட ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தார். முதல் டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களால் விலகிய ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தார். இருப்பினும் தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். ரோகித் சர்மா தனது கடைசி மூன்று இன்னிங்ஸில் 3, 6 மற்றும் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

பிரிஸ்பேனில் போட்டி முடிந்த பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா, “ஆமாம், நான் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. அதை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் என் மனதில் என்ன இருக்கிறது, நான் எப்படி என்னைத் தயார்படுத்திக்கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும். நான் உறுதியாக இருக்கிறேன். என் மனமும், உடலும், என் கால்களும் நன்றாக நகரும் வரையில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சில சமயங்களில் பேட்டிங் எண்கள் உங்களுக்கு சொல்லலாம். ஆனால் என்னைப் போன்ற ஒரு நபருக்கு, ஒவ்வொரு ஆட்டத்துக்கும் முன்பும் நான் என்ன மாதிரியான விஷயங்களை செய்கிறேன் என்பதுதான் முக்கியம் விஷயம், ” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.