Bigg Boss Tamil 8: ' Safe' ஆக வெளியேறிய ஆண் போட்டியாளர்… இந்த வார எவிக்‌ஷனில் நடந்தது என்ன?

பிக்பாஸ் சீசன் 8, 75 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பிறகு சில வாரங்கள் கழித்து வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் 6 பேர் என 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் ரவீந்தர், அர்னவ், சுனிதா, சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி, தர்ஷிகா, சிவக்குமார், சத்யா, வர்ஷினி வெங்கட், தர்ஷா குப்தா, உள்ளிட்டோர் வெளியேறினர்.

தொடர்ந்து ரஞ்சித், சௌந்தர்யா, பவித்ரா ஜனனி, ஜாக்குலின், மஞ்சரி, அன்ஷிதா, ஜெஃப்ரி, ராணவ், ராயன். தீபக், அருண், முத்துக்குமரன், வி.ஜே விஷால் ஆகியோர் நிகழ்ச்சியில் தொடரும் சூழலில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் நேற்று பிக்பாஸ் செட்டில் நடந்தது.

நாமினேஷன் பட்டியலில் சௌந்தர்யா, முத்துக்குமரன், அருண், ரஞ்சித் உள்ளிட்ட 11 பேர் இருந்தனர்.

நடிகர் ரஞ்சித்

இவர்களில் மக்களிடமிருந்து பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் நடிகர் ரஞ்சித் வெளியேறியிருக்கிறார்.

சமீப காலமாக பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வந்த நிலையில் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தேர்வான போதே, இவர் அந்த வீட்டில் எத்தனை நாள் தாக்குபிடிப்பார் என்கிற கேள்வி எழுந்தது. ஆனாலும் பெரிய அளவில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் 75 நாட்களுக்கும் மேலாக நிகழ்ச்சியில் இருந்து விட்டு வெளியேறியிருக்கிறார். இவர் ஆட்டத்தை safe ஆக விளையாடுவதாக தொடர்ந்து கூறி வந்தனர்.

ரஞ்சித் வெளியேறிய எபிசோடு இன்று ஒளிபரப்பாகவிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.