இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடங்கி உள்ளது. இதில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் இந்திய அணியின் வீரர் ரிங்கு சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம் பெற்று இருந்தார். இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபியில் ரின்கு சிங் முதன் முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரின்கு சிங் இதற்கு முன்பு பெரிதாக கேப்டன்சி பொறுப்பை ஏற்றது இல்லை. விஜய் ஹசாரே டிராபியில் தான் முதல் முறையாக ஒரு மாநில அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார் ரிங்கு சிங்.
உத்தரபிரதேச T20 லீக்கில் மீரட் மேவரிக்ஸ் அணியின் கேப்டனாக இருந்தது நல்ல அனுபவமாக இருந்தது என்றும், அது எனக்கு கைகொடுக்கும் என்றும் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். மேலும் தனது பந்துவீச்சை மேம்படுத்துவதில் கடுமையாக உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். “உத்தரபிரதேச T20 லீக்கில் மீரட் மேவரிக்ஸ் அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு என்னால் முடிந்த அனைத்தையும் அணிக்காக செய்தேன். என்னால் சிறப்பாக விளையாட முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கேப்டன் பொறுப்பை நான் மிகவும் ரசித்தேன், இதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
#Rnkusingh #VijayHazareTrophy
Rinku Singh to captain UP in Vijay Hazare Trophy pic.twitter.com/MSkkVg6Ts4
— Hari Mohan (@HariMohan3042) December 21, 2024
மேலும் பேசிய அவர், “உத்தரபிரதேச டி20 லீக்கில் அதிகம் பந்துவீசு முயற்சித்தேன். இன்றைய கிரிக்கெட் உலகில் நீங்கள் ஒரு ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும். இப்போது நான் பந்துவீச்சிலும் கவனம் செலுத்துகி வருகிறேன். இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பது குறித்து நான் இதுவரை யோசிக்கவில்லை. அணியின் வெற்றிக்காக மட்டும் உழைக்க விரும்புகிறேன். இந்திய அணியில் நான் இடம் பிடிப்பேன் என்று நான் யோசித்தது இல்லை. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் என் வேலையில் கடினமாக உழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் கோப்பையை வென்றது. இருப்பினும் ஏலத்தில் அவரை கேகேஆர் அணி தக்க வைக்கவில்லை. டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை ஏலத்தில் அதிக விலைக்கு எடுத்தது. அதே சமயம் கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. மேலும் சிஎஸ்கே வீரர் அஜிங்க்யா ரஹானேவை கடைசி நிமிடத்தில் ஏலத்தில் எடுத்தனர். கேகேஆர் அணி யாரை கேப்டனாக நியமிக்க உள்ளனர் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.