சந்தௌசி உத்திரப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஒரு ஆலய கிணறும் ஒரு சுரங்கப்பாதையு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தௌசியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது, மிகப்பெரிய படிக்கிணறும், அதற்குள் ஒரு மர்ம சுரங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 1957ல் பயன்படுத்தப்பட்ட மிகப் பிரமாண்டமான சுரங்கம் என தெரியவந்தது. பாங்கே பிஹாரி கோயிலுடன் இந்த சுரங்கப்பாதை இணைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இந்த சுரங்கப்பாதை கட்டுமானம் மற்றும் அமைப்பு பழமையானதாகவும் அதன் இருபுறமும் பல அறைகள் போன்ற கட்டமைப்புகளும் காணப்பட்டன. […]