டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம், காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, காவேரி பவேஜா, கார்த்தி சிதம்பரம் வியன்னா (ஆஸ்திரியா) மற்றும் இங்கிலாந்து செல்ல தனது நிறுவனம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அவரது மகளை சந்திக்கவும் அனுமதி வழங்கினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த […]