புனே, பெங்களூரு, ஹைதராபாத்துக்கு மக்கள் குடிபெயரும் அபாயம் உள்ளது: இன்போசிஸ் நாராயணமூர்த்தி எச்சரிக்கை

புதுடெல்லி: உல​கள​வில் பருவ நிலை மாற்றம் மிகப்​பெரிய பிரச்​சினை​யாகி வருகிறது என்று ஏற்கெனவே இன்போசிஸ் நிறு​வனர் நாராயண​மூர்த்தி கவலை தெரி​வித்து வருகிறார்.

இந்நிலை​யில் மகாராஷ்டிர மாநிலம் புனே​வில் கடந்த வெள்​ளிக்​கிழமை நடைபெற்ற ஒரு கூட்​டத்​தில் நாராயண​மூர்த்தி கூறிய​தாவது: பருவ நிலை மாற்றம் குறித்த பிரச்​சினைக்கு குறிப்​பிட்ட காலத்​துக்​குள் தீர்வு காணா​விட்​டால், எதிர்​காலத்​தில் வாழ தகுதி​யற்ற சிறு நகரங்​களில் இருந்து ஏராளமான மக்கள் புனே, பெங்​களூரு, ஹைதரா​பாத் போன்ற நகரங்​களுக்கு குடிபெயரும் அபாயம் உள்ளது. அதுவும் அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், போக்கு​வரத்து நெரிசல், சுற்றுச்​சூழல் மாசுபாடு போன்ற காரணங்​களால் அந்த நகரங்​களுக்கு குடிபெயர்​வதும் எளிதல்ல.

பருவ நிலை மாற்​றத்தை தடுக்க கார்ப்​பரேட் நிறு​வனங்​களும், அரசியல் தலைவர்​களும், அதிகாரி​களும் மனது வைத்​தால், பிரச்​சினைக்​குத் தீர்வு காண முடி​யும். இந்தியா, ஆப்பிரிக்​கா​வின் சில நாடு​களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதன்படி பார்த்​தால் அடுத்த 20 ஆண்டு​களில் இந்தியா​வில் சில பகுதிகள் வாழ தகுதி​யற்​றதாக மாறி​விடும். அதனால் வேறு நகரங்​களுக்கு மக்கள் மொத்​தமாக குடிபெயரும் நிலை உருவாகும்.

இந்தியா​வில் கார்ப்​பரேட் நிறு​வனர்கள் என்ற முறை​யில் நாம்​தான் அரசியல் தலைவர்​கள், அதிகாரி​களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இதுபோன்ற மொத்​தமாக குடிபெயரும் நிலையை தடுக்க வேண்​டும். இந்தி​யர்கள் எப்போதும் கடைசி நேரத்​தில்​தான் பிரச்​சினை​யின் தீவிரத்தை உணர்ந்து செயல்​படு​வார்​கள். ஆனால், 2030-ம் ஆண்​டிலேயே பருவ நிலை ​மாற்​றத்​தின் தீ​விரம் அதிகரிக்​கக் கூடும். இவ்​வாறு நாராயண​மூர்​த்​தி கூறினார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.