இந்தியாவில் கியா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் கார்களை அடுத்தடுத்து விற்பனைக்கு வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் கேரன்ஸ் அடிப்படையிலான எலெக்ட்ரிக் எம்பிவி மற்றொன்று சமீபத்தில் வெளியான சிரோஸ் எஸ்யூவி காரின் அடிப்படையிலான மாடலாகும். கேரன்ஸ் எலெக்ட்ரிக் எம்பிவி வருகை குறித்து ஏற்கனவே கியா நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்த நிலையில் தற்போது கூடுதலாக சிரோஸ் எலெக்ட்ரிக் மாடலாக வருவது உறுதியாக இருக்கின்றது. கியா மற்றும் ஹூண்டாய் என இரு நிறுவனங்களும் பேட்டரி செல்களை எக்ஸைட் எனர்ஜியில் இருந்து பெற உள்ளது. […]