சென்னை நாளைய கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற வன்முறையைத் தவிர்த்து, “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்” என்று பொறுமையையும், “ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள்” என ஈகையையும், “பகைவர்களையும் நேசியுங்கள்” எனக் கூறி இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு […]