சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் தினசரி 3 லட்சம் பேர் முதல் 4 லட்சம் பேர் வரை பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக அவ்வப்போது மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதை நம்பி வரும் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் […]