சென்னை: வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பாமக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ற நிலையில், காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்றார். தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, 24ம் தேதியுடன், 1,000 நாட்கள் ஆகின்றன. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தான் […]