புதுச்சேரியில் பிஎஸ்என்எல் மூன்று புதிய இலவச சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைலுக்கான இலவச இணைய தொலைக்காட்சி, தேசிய வைஃபை ரோமிங் சேவை (BSNL மற்றும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் பயன்படுத்தலாம்) மற்றும் ஃபைபர் அடிப்படையிலான இணைய டிவி சேவை ஆகியவை இதில் அடங்கும். இந்த சேவைகள் மூலம், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களுக்கும் மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் பயனர்களுக்கும், இணைய வசதி மற்றும் பொழுதுபோக்கு விருப்பங்களை அதிக அளவில் கொடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் தேசிய வைஃபை ரோமிங் சேவை
பிஎஸ்என்எல் தனது தேசிய வைஃபை ரோமிங் வசதியை கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. புதுச்சேரியில் மண்ணாடிபட்டு, செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புபட்டு உள்ளிட்ட 5 கிராமங்களில் வைஃபை ரோமிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த சேவையின் மூலம், பிஎஸ்என்எல் மற்றும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வைஃபை ஹாட்ஸ்பாட்களின் நெட்வொர்க் மூலம் எந்த இடையூறும் இல்லாமல் இணையத்தைப் பயன்படுத்த முடியும். கைப்பேசிகள், கணினியில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கட்டணமின்றி இந்தச் சேவைகளை வாடிக்கையாளா்கள் பெறலாம். இதன் மூலம் 26 தமிழ் தொலைக்காட்சிகளுடன் 400 தொலைக்காட்சிகளை கைப்பேசி மூலம் பாா்க்கலாம்.
BSNL ஃபைபர் இணைய வாடிக்கையாளர்கள்
கிராமங்களில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் வைஃபை வசதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள பி எஸ் என் எல், தற்போது புதுச்சேரியில் 75 ஆயிரம் வாடிக்கையாளா்கள் உள்ளனா் எனக் கூறியுள்ளது. BSNL ஃபைபர் இணைய வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு இணையத்தை எந்த BSNL Wi-Fi ஹாட்ஸ்பாட் அல்லது நாடு முழுவதும் உள்ள எந்த BSNL ஃபைபர் இணைய இணைப்பிலிருந்தும் அணுகலாம். இதற்காக அவர்களது வீட்டில் வழங்கப்பட்டு டேட்டா கணக்கிலிருந்து மட்டுமே பணம் கழிக்கப்படும். ஃபைபர் இணையம் உள்ள வாடிக்கையாளர்கள் பொது இடங்களில் அல்லது பிற BSNL ஃபைபர் வீடுகளில் கூட Wi-Fi ஐப் பயன்படுத்தலாம்.
பிஎஸ்என்எல் இலவச இன்ட்ராநெட் டிவி
இது தவிர புதுச்சேரியில் இலவச இன்டர்நெட் டிவி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 300க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்கள் மற்றும் தேவைக்கேற்ப பல்வேறு உள்ளடக்கம் உள்ளது. இருப்பினும், இந்த சேவை அனைத்து பிஎஸ்என்எல் மொபைல் பயனர்களுக்கு மட்டுமே இலவசம். புதுச்சேரியில் பிஎஸ்என்எல் தனது ஃபைபர் இணைய வாடிக்கையாளர்களுக்கு இலவச டிவி சேவையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சேவை மூலம் 500க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களை ஒரே கிளிக்கில் பார்க்கலாம்.