கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று செவ்வாய்கிழமை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சையை மேற்பார்வையிட்ட டாக்டர் முருகேஷ் மனோகர், அறுவை சிகிச்சை மிகவும் சிறப்பாக நடந்ததாகவும், சிவராஜ்குமார் சீராக குணமடைந்து வருவதாகவும் கூறினார். “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுநீர்ப்பையை நாங்கள் முழுவதுமாக அகற்றி, அவரது குடலைப் பயன்படுத்தி ஒரு செயற்கை சிறுநீர்ப்பையை புனரமைத்தோம்,” என்று நடிகர் சிவராஜ்குமார் ரசிகர்கள் பகிர்ந்துள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவண்ணா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் 62 […]