பிஆர்எஸ்ஐ தேசிய மாநாட்டில் ஐஓசி, என்எல்சி நிறுவனம் உட்பட தமிழகத்துக்கு 9 விருது

சென்னை: பப்​ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்​எஸ்ஐ) அமைப்​பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்​பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்​றது. இந்த மாநாட்டை அம்மாநிலத்​தின் துணை முதல்வர் விஜய் சர்மா தொடங்கி வைத்​தார்.

இந்த மாநாட்​டில் பல்வேறு துறை​களில் சிறப்பாக சேவை​யாற்றிய தனிநபர்​களுக்​கும், நிறு​வனங்​களுக்​கும் விருதுகள் வழங்​கப்​பட்டன. இதில், தமிழகம் மட்டும் 9 விருதுகளை தட்டிச் சென்​றுள்ளது.

குறிப்​பாக, இந்தியன் ஆயில் கார்ப்​பரேஷன் (ஐஓசி) தென் மண்டலப் பிரிவு, நெய்வேலி லிக்னைட் நிறுவனம் (என்எல்சி) பொதுத் துறை நிறுவனங்கள் விருதுகளை வென்​றன.

மிகச் சிறந்த முறை​யில் நிகழ்ச்​சிகளை நடத்​தி​யதற்காக பிஆர்​எஸ்​ஐ-​யின் சென்னைப் பிரிவுக்கு சிறப்பு விருது வழங்​கப்​பட்​டது. மக்கள் தொடர்​புத் துறை​யில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றியதற்காக பிரிசம் பி.ஆர். நிறு​வனத்​தின் இணை நிறு​வனர் மற்றும் மேலாண் இயக்​குநர் சத்யன் பட்டுக்கு பி.ஆர்​.எஸ்.ஐ. லீடர்​ஷிப் விருது வழங்​கப்​பட்​டது.

தமிழகத்துக்கு அதிக விருது: அப்போலோ மருத்​துவ​மனை, கோரமண்டல் இண்டஸ்ட்​ரீஸ், கேட்​டலிஸ்ட் பி.ஆர். உள்ளிட்ட நிறு​வனங்​களுக்​கும் விருதுகள் வழங்​கப்​பட்டன.

மக்கள் தொடர்​புத் துறை​யில் டெல்லி, மகாராஷ்டிரா​வைத்தொடர்ந்து தமிழக​மும் இம்​முறை அதிக எண்ணிக்கையில் விருதுகளை தட்​டிச் சென்றிருப்பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.