மெரினா கடற்கரையை சுற்றுலா தலமாக மாற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டதையடுத்து, கடந்த சில மாதங்களாக மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள லூப் ரோடு பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பெரும் கவலையில் உள்ளனர். இந்நிலையில், மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி அமைக்கும் திட்டத்தைக் கண்டித்து நொச்சிக்குப்பம் மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக மெரினா கடற்கரையை ஒட்டி காந்தி […]