Bigg Boss Tamil 8: "அதுதான் அன்ஷித்தா…" – சம்மந்தியை அனைவருக்கும் ஊட்டிய அன்ஷித்தாவின் தாய்!

பிக் பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கிவிட்டது.

போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குள் வந்து மற்ற போட்டியாளர்களுடனான கருத்து முரண்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினத்தின் எபிசோடில் மஞ்சரி, ரயன், விஷால், தீபக் ஆகியோரின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்திருந்தனர். இதற்கடுத்த நாள் செளந்தர்யா, அன்ஷித்தா, ராணவ், பவித்ரா ஆகியோரின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். இந்த எபிசோட் இன்று ஒளிபரப்பாகவிருக்கிறது.

பவித்ராவின் சகோதரர் வீட்டிற்குள் வந்து, அவரிடம் பேசியிருக்கிறார். ஆனால் பவித்ராவின் தாயார் வீட்டிற்குள் வரவில்லை. அதன் பிறகு பவித்ராவுக்கு நம்பிக்கை கொடுப்பதற்காக ஆடியோ பதிவு செய்து அனுப்பியிருக்கிறார் பவித்ராவின் தாயார். இதனால் எமோஷனலான பவித்ராவை அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் `பவித்ரா னா ஃப்ளவர்னு நினைச்சியா! ஃபயர்’ என டைலாக் பேசி கலகலப்பாக்கியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், இதுவரை பிக் பாஸ் வீட்டில் பவித்ரா கேப்டனாகவில்லை என்பதைக் கூறி அதிருப்தியையும் காட்டியிருந்தார்.

Pavithra Bigg Boss

இதன் பிறகு அன்ஷித்தாவின் தாயாரும் சகோதரரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில் பல முறை தாயை எண்ணி எமோஷனலாகி இருந்த அன்ஷித்தா இந்த முறை தாயாரை நேரில் பார்த்ததும் ஆனந்தத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். `அன்ஷித்தா சண்டை போடுவா. ஆனால், அடுத்த நிமிடமே அனைவருக்கும் சாப்பாடு ஊட்டிவிடுவாள். இதுதான் அவளின் கேரக்டர்’ என அன்ஷித்தாவின் சகோதரர் அழகாக எடுத்துரைத்திருந்தார். இதன் பிறகுதான் மெயின் மொமன்ட் ஒன்று நடந்திருக்கிறது. சம்மந்தி என்கிற உணவால் வீட்டிற்கு ஒரு முறை அதிரடி ரகளை உருவாகியிருந்தது பலருக்கும் நினைவிருக்கும். பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் சம்மந்தி கலந்த சாதத்தைத் தயார் செய்து அனைவருக்கும் ஊட்டிவிட்டிருக்கிறார் அன்ஷித்தாவின் தாயார்.

இந்த எமோஷனல் மொமன்ட் கொண்ட எபிசோட் இன்று இரவு ஒளிபரபரப்பாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.