அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற கனடா கல்லூரியில் இந்தியர்களுக்கு அட்மிஷன்

புதுடெல்லி: குஜராத் மாநிலம் காந்​திநகர் மாவட்​டத்​தில் உள்ள டிங்​குச்சா கிராமத்​தில் வசித்து வந்த குடும்பத்தை சேர்ந்த நான்கு இந்தி​யர்​களின் உடல் கனடா எல்லை​யில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி​யில் கண்டெடுக்​கப்​பட்​டது.

இதையடுத்து, குஜராத் அகமதாபாத் போலீ​ஸார் நடத்திய விசா​ரணை​யில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்வி நிறு​வனத்​தின் முதல்வர் பவேஷ் அசோக்​பாய் படேல் மீது வழக்​குப் பதிவு செய்​தனர். அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக குடியேற விரும்​பும் இந்தி​யர்​களிடம் பவேஷ் ரூ.60 லட்சம் வரை பணம் பெற்றுக்​கொண்டு கனடா கல்லூரி​யில் சேர்க்கை பெறு​வதற்காக மாணவர் விசாவை வாங்கி கொடுத்து இந்த மோசடி​யில் ஈடுபட்​டுள்​ளார்.

இதனைத்​தொடர்ந்து, அமலாக்கத் துறை​யும் விசா​ரணை​யில்இறங்​கியதையடுத்து, மும்பை மற்றும் நாக்​பூரைச் சேர்ந்த இரண்டு நிறு​வனங்கள் லட்சக் கணக்​கில் பணத்​தைப் பெற்றுக்​கொண்டு கனடா கல்லூரி​யில் இந்தி​யர்​களுக்கு சேர்க்கை பெற்றுத்​தரு​வதன் மூலமாக அமெரிக்க எல்லையை சட்ட​விரோதமாக கடக்க உதவி வந்தது கண்டறியப்​பட்​டது.

அமலாக்கத் துறை கடந்த வாரம், மும்பை, நாக்​பூர், காந்​திநகர், வதோதரா உள்ளிட்ட 8 இடங்​களில் நடத்திய சோதனை​யில் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​களின் அடிப்​படை​யில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு கல்வி நிறு​வனங்கள் 35,000 இந்தி​யர்களை ஒவ்வொரு ஆண்டும் கனடா கல்லூரி​களுக்கு பரிந்​துரை செய்தது தெரிய​வந்​தது. இதையடுத்து, பல்​வேறு வங்கி கணக்​கு​களில் இருந்த ரூ.19 லட்​சத்தை அமலாக்​கத் துறை ​முடக்​கி​யுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.