ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோயில்: அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்

திருமலை: ஆந்திர மாநிலம் திரு​மலை​யில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்​காவலர் குழு கூட்டம் தலைவர் பிஆர். நாயுடு தலைமை​யில் நேற்று முன்தினம் நடைபெற்​றது.

இதில் பல முக்கிய தீர்​மானங்கள் ஒருமனதாக நிறைவேற்​றப்​பட்டன. ஆலோசனை கூட்​டத்​துக்​குப் பின்னர், இதில் எடுக்​கப்​பட்ட தீர்​மானங்கள் குறித்து அறங்​காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஏழுமலை​யான் கோயில்களை ஒவ்வொரு மாநிலத்​தி​லும் அமைக்க வேண்​டும் என்னும் முதல்வர் சந்திர​பாபு நாயுடு​வின் உத்தரவை ஏற்று குளோபல் எக்ஸ்​பான்ஷன் என்ற பெயரில் குழு அமைக்​கப்​படும்.

இக்குழு​வின் பரிந்​துரைகளின் ​படி, ஒவ்வொரு மாநிலத்​தி​லும் முக்கிய நகரில் ஏழுமலை​யான் கோயில் கட்டப்​படும். சிம்ஸ் தேவஸ்தான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்​துவ​மனைக்கு மத்திய அரசு தேசிய அங்கீ​காரம் வழங்கி, அதற்கான நிதி​யை​யும் ஒதுக்க வேண்டுமென தீர்​மானம் இயற்​றப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.