'பெண்ணைப் பெற்ற தகப்பன் என்ற முறையில்…' – அண்ணா பல்கலை., மாணவி விவகாரம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் தமிழகமெங்கும் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகிற சூழலில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இது தொடர்பாக தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

”அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவிக்கு கடந்த திங்களன்று பாலியல் வன்கொடுமை.. பாதுகாப்பு வேண்டி மாணவர்கள் போராட்டம்.. உடனே பொதுவாக சொல்லப்படும் கருத்து ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது”

சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது யார் குற்றம்?

கல்வி கற்கச் செல்லுமிடத்தில் காதலியுங்கள் என்று பெற்றோர் சொல்லி அனுப்பினார்களா?

காதலனுடன் மறைவிடம் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லிற்றா?

வீடியோ பதிவை வீட்டிற்கு அனுப்புவேன், நெட்டில் விடுவேன் என்று அந்தக் காமுகன் மிரட்டினால், விட்டால் விடடா என்று செருப்பால் அடித்திருக்க வேண்டும்.

அவனை மட்டுமல்ல, தப்பி ஓடிய அந்தக் காதலனையும் தான்.

MS Baskar

ஒவ்வொருவருக்கும் ஒரு கான்ஸ்டபிள் போட்டா பாதுகாப்பு தர முடியும்?

பெண்ணைப் பெற்ற தகப்பன் என்ற முறையில் சொல்கிறேன்..

மொத்தத்தில் அனைவரும் முக்கியமாக பெண் குழந்தைகள் தற்காப்பு கலை கற்க வேண்டியது அவசியம்.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் பயனில்லை.

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தவிர குற்றங்கள் குறையப் போவதில்லை.

இதில் ஒருவேளை அரசைக் குறை கூறினால் அது நியாயமே இல்லை.

வேதனையுடன் எம்.எஸ்.பாஸ்கர்” எனத் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.