மத்திய அரசு நடத்தி வரும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், அண்மைக்காலமாக மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்திய பிறகு பெரும்பாலான மக்களின் கவனம் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ள நிலையில், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் தனது நெட்வொர்க்கையும் பலப்படுத்தி வருகிறது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) சமீபத்தில் IFTV (Intranet Fiber TV) சேவையைத் தொடங்கியது. இது தவிர, நிறுவனம் BiTV சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் 300க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை முற்றிலும் இலவசமாகப் பார்க்கலாம். இது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடும் சவாலை கொடுக்கும்
BSNL வழங்கும் இந்த இரண்டு சேவைகள் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நேரலை டிவி சேனல்களை இலவசமாக பார்க்கலாம். BSNL IFTV மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இப்போது பஞ்சாப், ஹரியானா மற்றும் புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. IFTV என்பது ஃபைபர் அடிப்படையிலான இணைய சேவையாகும், BiTV என்பது ஃபைபர் அல்லாத இணைய சேவையாகும்.
BSNL IFTV சேவை மூலம் 500க்கும் மேற்பட்ட இலவச டிவி சேனல்கள்
பிஎஸ்என்எல் வைஃபை பிராட்பேண்ட் மூலம் ஐஎஃப்டிவி சேவையை வழங்குகிறது. இதில், 500க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்கள் முற்றிலும் இலவசம். BSNL வழங்கும் FTTH (ஃபைபர்-டு-தி-ஹோம்) வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை முற்றிலும் இலவசம். அதோடு, பிரீமியம் பே டிவி கண்டெண்ட்களையும் அனுபவிக்கலாம்.
BSNL BiTV சேவை மூலம் 300க்கும் மேற்பட்ட இலவச டிவி சேனல்கள்
BiTV என்பது BSNL மொபைல் வாடிக்கையாளர்களுக்கானது. இதில், பிரீமியம் சேனல்களை உள்ளடக்கிய 300க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். இது தற்போது புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம். ஒட்டுமொத்தமாக, நேரடி தொலைக்காட்சி சேனல்களைக் காண்பிக்கும் தொழில்நுட்பம் ஒன்றுதான். வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்கும் விதம் மட்டுமே வேறுபட்டதாக இருக்கும்.
பிஎஸ்என்எல்லின் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
BSNL வழங்கும், IFTV மற்றும் BiTV இரண்டும் முக்கியமான மற்றும் ஒத்த சேவைகளாகும். இருப்பினும், நிறுவனம் பல்வேறு பிராண்டுகளுடன் அவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் ஒன்று குறிப்பாக ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கானது.மற்றொன்று மொபைல் வாடிக்கையாளர்களுக்கானது.
தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல்லின் நுகர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) டிசம்பர் 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பிஎஸ்என்எல் அக்டோபர் மாதத்தில் 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.