Fitness: நோ ஜிம், நோ டயட்… 37 கிலோ எடையை குறைத்த 36 வயது பெண் – எப்படி?

Fitness Influencer தனுஶ்ரீ சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய அளவில் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். தினமும் உடல் பருமனை குறைப்பது, ஃபிட்னஸ் குறித்து வீடியோக்களை பதிவிட்டு வரும் இவரது கதை பலருக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்துள்ளது.

தனுஶ்ரீ 25 வயதில் அவரது உடல் எடை பல வழிகளில் பிரச்னையாக இருப்பதை உணர்ந்துள்ளார். அப்போது 85 கிலோ எடையில் இருந்த அவர், அவரது உடலில் சிக்கிக்கொண்டது போல சோர்வாக உணர்ந்துள்ளார்.

இதனால் அவரது ஆரோக்கியத்தையும், மோசமான வாழ்க்கைமுறையால் இழந்த தன்னம்பிக்கையையும் மீட்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

பருமனான தன்னம்பிக்கை இல்லாத பெண்ணிலிருந்து ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சராக மாறியிருக்கும் தனுஶ்ரீ அவரது 6 வருட பயணம் குறித்து பேசியுள்ளார்.

Tanusree

பிரசவத்துக்குப் பிறகு தன்னம்பிக்கை இழந்த தனுஶ்ரீ!

தனுஶ்ரீ சிறுவயதில் ஆரோக்கியமான குழந்தையாகவே வளர்ந்துள்ளார். ஆனால் 20-களில் அவரது உடல் எடை கவலையளிக்கும் விதமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. சிறு வயதிலேயே திருமணமும் நடந்ததால் குழந்தை பிறந்த பிறகு சந்திக்க வேண்டிய சிக்கல்கள் அவரை முடக்கிவிட்டது.

ஹார்மோன்கள் சமநிலையற்ற தன்மையால் மன அழுத்தம், ஸ்ட்ரெஸ் ஏற்பட்டு ஒவ்வொருநாளும் சோர்வானதாவே கடந்துள்ளார். இதனால் தன்னம்பிக்கை இழந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு திருப்தியளிக்காத அந்த வாழ்க்கைமுறையில் இருந்து வெளியேற வேண்டுமென முடிவு செய்துள்ளார்.

ஒல்லியாவது மட்டுமல்லாமல் தசைகளின் வலிமையையும் அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அவரது ஃபிட்னஸ் பயணம் தொடங்கியுள்ளது. ஜிம்முக்கு செல்லாமல், பெரும் பணம் செலவழித்து ஃபிட்னஸ் ப்ரோக்ராம்களில் இணையாமல் எளிமையாக வீட்டிலிருந்தே ஆரம்பித்துள்ளார்.

“தப்பு செஞ்சு கத்துகிட்டேன்”

உடல் பயிற்சியிலும் டயட்டிலும் அனுபவம் இல்லாததால் அடிப்படை உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கியிருக்கிறார். சீலா (ஒருவகை அடை), சோயா, பனீர், முட்டை, பீன்ஸ் மற்றும் பருப்பு என புரதசத்து மிக்க இந்திய உணவுகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

Tanusree

ஒரு அம்மாவாக தனது பொறுப்புகளை செய்துகொண்டு, வீட்டையும் கவனித்துக்கொண்ட தனுஶ்ரீ, தனது உடல் நலனுக்காக தினசரி ஒரு மணிநேரம் செலவழிக்கத் தொடங்கியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக கார்டியோ மற்றும் பழு தூக்கும் பயிற்சிகளை செய்யத் தொடங்கியிருக்கிறார்.

தொடக்கத்தில் தவறுகள் செய்தாலும் நாள்போக்கில் ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டுள்ளார். 6 வருடங்கள் மிகவும் மெதுவாக முன்னேற்றமடைந்தாலும் 37 கிலோ எடையைக் குறைத்து 48 கிலோ எடைக்கு வந்துள்ளார் தனுஶ்ரீ.

இது உடல் எடை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்று கூறும் தனுஶ்ரீ, இந்த செயல்முறையில் மன உறுதியையும் பெற்றுள்ளார். உடல் சோர்வு நீங்கி அவருள் தன்னம்பிக்கை உதித்துள்ளது. இந்த பயணத்தில் அவரது சமூக வலைத்தள கணக்கும் வளர்ந்துள்ளது. இப்போது பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.