iPhone 16 வாங்க அட்டகாசமான வாய்ப்பு: ரூ.16,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது

Cheapest Price For iPhone 16: ஐபோன் பிரியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஐபோன் வாங்க நினைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு வந்துள்ளது. புதிய ஐபோன் 16 ஐ வாங்க எண்ணி, நல்ல சலுகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களுக்கு இது சரியான நேரம். இது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். 

iPhone 16 இல் ரூ.16,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. ஆனால் இந்த ஆஃபர் Apple இன் பிரத்யேக சில்லறை விற்பனையாளரான Imagine இன் கிறிஸ்துமஸ் கார்னிவல் விற்பனையின் ஒரு பகுதியாகும் என்பதை வாடிக்கையாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த ஆஃபர் இன்றுடன், அதாவது டிசம்பர் 26 ஆம் தேதி  முடிவடைகிறது. இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இன்றே இதை வாங்க வேண்டும்.

iPhone 16: 16 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி

– ஐபோன் 16 இன் ஆரம்ப விலை ரூ.79,900. 
– Imagine விற்பனையில் இதற்கு ரூ. 3,500 தள்ளுபடி கிடைக்கிறது.
– அதன் பிறகு இதன் விலை ரூ.76,400 ஆகும். 
– இது தவிர, எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கியின் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி பெறலாம். – அதாவது போனின் விலை ரூ.72,400 ஆக குறைக்கப்படும்..
– இது தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை பரிமாற்றிக்கொண்டால், அதாவது எக்ஸ்சேஞ்ச் செய்தால், கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.8,000 வரை தள்ளுபடி பெறலாம் என இமேஜின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிகையாளர்களுக்கு அதிக தள்ளுபடி கிடைத்தால், ஐபோன் 16 ஐ சுமார் ரூ. 64,400 க்கு வாங்கலாம், இது மிகவும் நல்ல ஒரு ஒப்பந்தமாக இருக்கும்.

நீங்கள் ஐபோன் 16 ஐ வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். ஐபோன் 16 ஆப்பிளின் சமீபத்திய ஐபோன். இது புதிய சிப்செட்களைக் கொண்டுள்ளது. இந்த முறை ஆப்பிள் அடிப்படை மாடலிலும் எந்தக் குறைப்பும் செய்யவில்லை. சிறிய அளவிலான ஃபோன்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இதுவே சிறந்ததாக இருக்கும்.

iPhone 16: விவரக்குறிப்புகள்

ஐபோன் 16 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி திரையைக் கொண்டுள்ளது. இது நேர்த்தியான பிரகாசத்தை அளிக்கின்றது. iPhone 16 “டைனமிக் ஐலேண்ட்” என்ற புதிய அம்சத்தையும் கொண்டுள்ளது, இது பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது. அதன் உள்ளே மிக வேகமான செயலி உள்ளது. இது A18 சிப்செட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஃபோன் இரண்டு சிம் கார்டுகளை ஆதரிக்கிறது. இது iOS 18 இயங்குதளத்துடன் வருகிறது. இது பல ஸ்மார்ட் அம்சங்களையும் கொண்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.