BSNL Broadband Affordable Plans, Free Internet: தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனித்துவமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. குறிப்பாக விலை மலிவான திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கமே அதிகம் இருப்பார்கள். மலிவான விலையில் தரமான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை அளிக்கின்றன.
மொபைல் பிரீபெய்ட் திட்டங்களில் மட்டுமின்றி பிராட்பிராண்ட் சந்தையிலும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் பல்வேறு மலிவான, தரமான திட்டங்களை கொண்டுள்ளது. இதனால், பிரீபெய்ட் மட்டுமின்றி பிராட்பிராண்ட் சந்தையிலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. அப்படியிருக்க தற்போது மேலும் ஒரு சிறப்பான அறிவிப்பை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
ரூ.500 குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்
ஆம், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 2 மலிவான பிராட்பிராண்ட் திட்டங்களுடன் 30 நாள்களுக்கு இலவச இணையத்தை பிஎஸ்என்எல் வழங்க உள்ளது. மேலும், அதிக ரூபாய் செலவு செய்யாமல் வேகமான இணைய சேவையையும் நீங்கள் அனுபவிக்கலாம். பிஎஸ்என்எல் ஃபைபரின் அந்த இரண்டு திட்டங்களையும் அதன் வேலிடிட்டியையும், அதன் பலன்களையும் இங்கு காணலாம்.
பிஎஸ்என்எல் புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கும் 3 மாத சந்தா உடன் மலிவான விலையில் பிராட்பிராண்ட் திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதன் விலை ரூ.500 குறைவாகவே இருக்கும் என்றாலும், இதனை நீங்கள் வரும் டிச. 31ஆம் தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும் என்பதையும் பயனர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நியாயமான விலையில் அதிக டேட்டா வேண்டும் என்றால் இந்த திட்டங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் பைபர் பேஸிக் பிளான்
இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆகும். இதில் 50Mbps இணைய வேகத்தில் 3.3TB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா நிறைவடைந்துவிட்டால் 4Mbps வேகத்தில் நீங்கள் இணையத்தை அனுபவிக்கலாம். இதிலும் எஸ்டீடி, லோக்கல் கால்கள் அனைத்தும் வரம்பற்ற வகையில் கிடைக்கும். இதில் நீங்கள் மூன்று மாத சந்தா செலுத்தினால் 100 ரூபாய் தள்ளுபடியாக வழங்கப்படும்.
பிஎஸ்என்எல் பைபர் பேஸிக் நியோ பிளான்
இந்த பிளானின் விலை ரூ.449 ஆகும். இந்த திட்டத்தில் ஒரு மாதத்திற்கு 3.3TB (3300GB) டேட்டா கொடுக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் 30Mbps அதிவேக இணைய சேவையை பெறலாம். உங்களின் டேட்டா நிறைவடைந்துவிட்டால் 4Mbps அடுத்து இணையசேவையை அனுபவிக்கலாம். இதில் அனைத்து நெட்வோர்க்களிலும் வரம்பற்ற காலிங் வசதியை வழங்குகிறது. இதனை மூன்று மாதத்திற்கு வாங்குபவர்களுக்கு ரூ.50 தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.
இந்த இரண்டு திட்டங்களையும் நீங்கள் டிச.31ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்துகொண்டால் சிறப்பு தள்ளுபடியும் கிடைக்கிறது. அதாவது உங்களுக்கு ஒரு மாதம் இணையம் இலவசமாக வழங்கப்படும். ஆனால், நீங்கள் மூன்று மாதத்திற்கான சந்தாவை கட்டினால் மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். இதனால் நீங்கள் நாங்கள் மாதங்கள் டேட்டா பலன்களை அனுபவிக்கலாம்.