பிரயாக்ராஜ்: மகா கும்ப மேளா கடந்த 1882-ம் ஆண்டு நடைபெற்றபோது, அதன் செலவு ரூ.20,000-மாக இருந்தது. அது தற்போது ரூ.7,500 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்து மதத்தில் மகா கும் பமேளா மிகவும் புனிதமான யாத்திரை. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி என்ற நான்கு நதி களின் கரையோரங்களில் அமைந்துள்ள புனித தலங்களில் கும்ப மேளா நடைபெறுகிறது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக் ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறும் கும்பமேளா வில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித நீராடு வர். கும்பமேளாவின் வரலாற்று ஆவண தொகுப்புகளை ஆராய்ந் தால் அதில் பல தகவல்கள் உள்ளன.
கடந்த 1882-ம் ஆண்டு நடை பெற்ற மகா கும்பமேளாவில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் மவுனி அமாவாசை நாளில் புனித நீராடி யுள்ளனர். அப்போது நாட்டின் மக்கள் தொகை 22.5 கோடியாக இருந்தது. அப்போதுகும்பமேளா வுக்கு ரூ.20,288 செலவிடப்பட்டுள் ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.3.6 கோடிக்கு நிகரானது. 1894-ம் ஆண்டு 10 லட்சம் பேர் பங்கேற்றபோது இதன் செலவு ரூ.69,427- ஆக உயர்ந்தது. 1906-ம் ஆண்டில் 25 லட்சம் பேர் பங்கேற்றபோது, இதன் செலவு ரூ.90,000-ஆக உயர்ந்தது. 1918-ம் ஆண்டு 30 லட் சம் பேர் பங்கேற்றபோது ரூ.1.4 லட்சம் செலவானது.
ஆனால் தற்போது அடுத்த மாதம் நடைபெறவுள்ள கும் பமேளாவில் 40 கோடி மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படு கிறது. இதற்கு ரூ.7,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்று பேராசிரியர் யோகேஸ்வர் திவாரி கும்பமேளா பற்றி கூறியதாவது: கடந்த 1942-ம் ஆண்டு நடைபெற்ற கும்ப மேளாவில் இந்தியாவின் அப்போதைய வைஷ்ராய் மற்றும் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் லின்லித்கோவ், மதன் மோகன் மாளவியாவுடன் பங்கேற்றார். அப்போது லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவதை பார்த்து அவர் ஆச்சர்யம் அடைந்தார். இந்த விழாவை பற்றி மக்களிடம் தெரிவிக்க எவ்வளவு செலவாகிறது என அவர் கேட்டார். 2 பைசா செலவில் வெளியிடப்படும் பஞ்சாங்கத்தில், திருவிழா தேதிகள் இடம் பெறும். அதைப் பார்த்து மக்கள் வருவர் என மாளவியா பதில் அளித்தார். இவ்வாறு யோகேஸ்வர் திவாரி கூறியுள்ளார்.