சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், அண்ணா பல்கலை பாலியல் விவகாரத்தில் அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையை குற்றம் சாட்டி உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று அறிவித்தபடி, இன்று காலை காலில் செருப்பு அணியாமல், சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் […]