”சத்யநாராயணனின் சிகிச்சை செலவு முழுவதையும் தலைவர் ரஜினி செலுத்தி விட்டார்”- ராஜேஸ்வரன் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாநில பொறுப்பாளர் சத்யநாராயணன் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாளைக்கு சத்யநாராயணனின் சிகிச்சைக்கு ரூ. 25,000 செலவாகிறது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மருத்துவ செலவுக்கு போதிய பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சத்யநாராயணன்

இதையடுத்து, சத்யநாராயணன் நிலை குறித்து விகடனில் செய்தி வெளியானது. இந்தநிலையில்

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் மயிலாடுதுறை, நாகை மாவட்ட செயலாளர், ராஜேஸ்வரன்

நமக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ சத்யநாராயணனின் கம்பீரத்தை பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். தலைவர் ரஜினி மீது இன்றைக்கும் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் சத்யநாராயணன். தலைவரை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாகப் பேச மாட்டார். அவர் என்ன கேட்டாலும் ரஜினி செய்வதற்குத் தயார், ஆனால் சத்யநாராயணன் எதையும் கேட்க மாட்டார்.

சிறுநீரக பாதிப்பு தொடர்பாக கும்பகோணம் மருத்துவமனையில் சத்யநாராயணன் அனுமதிக்கட்டிருக்கும் தகவல் தெரிந்த அடுத்த நாளே தலைவர் ரஜினி, சத்யநாராயணனுக்கு போன் செய்து சென்னையில் சிகிச்சையைப் பார்த்துக் கொள்ளலாம்னு வரச்சொன்னார், அதற்கு அவர் கொஞ்சம் சரியாகட்டும் வருகிறேன் எனச் சொல்லியிருக்கிறார். அப்போது, சத்யநாராயணனால் சரியாகப் பேச முடியவில்லை. உடனிருந்த பாபா மூலம் எதற்கும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லுங்க, எவ்வளவு செலவானாலும் பார்த்து கொள்கிறேன். அவர் குணமாகணும் அதான் முக்கியம். சிகிச்சைகான அனைத்து செலவுக்கான பில், மருத்துவமனையில் வங்கி கணக்கு விபரம் உள்ளிட்டவற்றை அனுப்பி வையுங்கள் அந்தப் பணத்தை அனுப்பச் சொல்கிறேன் எனக்கூறியிருக்கிறார்.

சத்யநாராயணனுடன் ராஜேஸ்வரன்

ஆனால், சத்யநாராயணன் உடன் இருந்தவர்கள் பில்லை அனுப்பவில்லை. இந்த நிலையில் இதுவரை ஆன செலவு விபரங்கள் இன்று அனுப்பப்பட்டது. உடனே தலைவர் பணத்தை செலுத்தி விட்டார். ரஜினியும், சத்யநாராயணனும் நெருங்கிய நண்பர்கள். சத்யநாராயணனுக்கு ஒண்ணுனா ரஜினி தவிச்சுடுவார், அப்படி தான் இப்பவும் தவிச்சார். பொருளாதார நெருக்கடி சத்நாராயணனுக்கு இல்லை. ஆனாலும் சிகிச்சைகான அனைத்து செலவையும் தலைவர் ரஜினி செய்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் அளவு கடந்த அன்பு கொண்டவர்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.