ஜியோவின் புத்தாண்டு பரிசு.. ரூ.2025 ரீசார்ஜில்… ரூ.2150-க்கான கூடுதல் பலன்கள்

Jio New Year Offer 2025: புத்தாண்டில் ஜியோ புத்தாண்டு சலுகை 2025 என்ற சலுகை திட்டத்தை  ரூ. 2025 கட்டணத்தில் வழங்குகிறது.  முகேஷ் அம்பானியின் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டை முன்னிட்டு பயனர்களுக்கு இலவச பரிசை வழங்குகிறது. நிறுவனம் ஜியோ பயனர்களுக்கு ரூ.2150 மதிப்புள்ள பலன்களை இலவச பரிசாக வழங்குகிறது. 

புத்தாண்டு சலுகை 2025 ரீசார்ஜ் திட்டத்தில் ரூ.2150க்கான பலன் எப்படி வழங்கப்படும் மற்றும் இந்த திட்டம் என்ன பலன்களுடன் வருகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஜியோ 2025 திட்ட விவரங்கள்

ஜியோ ரீசார்ஜ்  திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு வழங்கப்படுகிறது. 2025 ரூபாய் திட்டத்தில் 200 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இது தவிர, உங்களுக்கு இலவச பயணம் மற்றும் உணவு கூப்பன் தள்ளுபடி வவுச்சர்களும் வழங்கப்படும்.

 2150 ரூபாய்க்கான நன்மைகள்

ரூ. 2025 திட்டத்தை வாங்கும்போது, ​​விமான டிக்கெட் முன்பதிவில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ரிலையன்ஸ் ஜியோவிடமிருந்து EasemyTrip வவுச்சரைப் பெறுவீர்கள். இந்த வவுச்சர் மூலம் நீங்கள் விமான முன்பதிவில் ரூ.1500 வரை தள்ளுபடி பெற முடியும்.

Ajio இலிருந்து ஆடைகளை வாங்கினால், குறைந்தபட்சம் 2999 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்தால் 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, ரூ.150 தொகைக்கான ஸ்விக்கி  வவுச்சர் வழங்கப்படுகிறது, அதை ஸ்விக்கியில் ரிடீம் செய்வதன் மூலம் ரூ.150 தள்ளுபடியைப் பெறலாம்.

ஜியோ புத்தாண்டு சலுகை 2025

ஜனவரி 11, 2025 வரை ரிலையன்ஸ் ஜியோவின் இந்த சலுகையின் பலனை நீங்கள் பெற முடியும், அதாவது ஜனவரி 11 வரை ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால், 2150 ரூபாய்க்கான பலனைப் பெறுவீர்கள்.

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ உட்பட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடந்த ஜூலை மாதத்தில் கட்டணங்களை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ கட்டணத்தை உயர்த்தினாலும், அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.