பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு கடந்த 12-ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பின்னர், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்ட அவர் ஓரிரு நாட்களில் அதில் இருந்து வெளியே கொண்டு வரப்படுவார் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், அவருடைய மருத்துவ நிலை முன்னேற்றம் கண்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து அத்வானி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கு முன்னதாக, அத்வானி கடந்த ஆகஸ்டு 6-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதேபோன்று ஜூலை 3-ந்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண்டின் தொடக்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

1986 முதல் 1990 வரையிலும், 1993 முதல் 1998 வரையிலும் பின்னர் 2004 முதல் 2005 வரையிலும் என பல்வேறு காலகட்டங்களில் பா.ஜ.க. தலைவராக அத்வானி பதவி வகித்திருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.