வதோதரா,
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று நடக்கிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ரவால், ஹர்லீன் தியால், ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ளனர். குறிப்பாக மந்தனா தனது கடைசி 6 சர்வதேச போட்டியில் 5 அரைசதமும், ஒரு சதமும் அடித்துள்ளார். பந்து வீச்சில் ரேணுகா சிங், பிரியா மிஷ்ரா, தீப்தி ஷர்மா, திதாஸ் சாது வலு சேர்க்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் தவிர மற்ற வீராங்கனைகள் தடுமாறுகின்றனர். தங்களது முழு திறமையை காட்டினால் இந்தியாவுக்கு சவால் அளிக்கலாம். இல்லாவிட்டால் இந்திய அணி தொடரை முழுமையாக வெல்வதில் பெரிய அளவில் தடை எதுவும் இருக்காது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.