பிக் பாஸ் நிகழ்ச்சியின் 82-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இறுதிக் கட்டத்தை இந்த நிகழ்ச்சி நெருங்கி இருக்கும் நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில் சௌந்தர்யாவைப் பார்க்க அவர்கள் குடும்பத்தினர் வந்துசென்ற நிலையில் தற்போது பிக் பாஸ் விஷ்ணு சௌந்தர்யாவைப் பார்க்க வந்திருக்கிறார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில், சௌந்தர்யா, விஷ்ணுவிடம் ‘will you marry me?’ என்று கேட்கிறார். ‘love you too’ என்று பதிலளித்த விஷ்ணு இந்த மாதிரியான ஒரு மொமன்ட் என் வாழ்கையில நடந்தது கிடையாது என்கிறார். எனக்கு உன்னைய ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் உங்கள சர்ப்ரைஸ் பண்ணலானு வந்தேன், ஆனா…’ என்று வெட்கத்தில் நெகிழ்கிறார் விஷ்ணு.