பிக் பாஸ் நிகழ்ச்சியின் 82-வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இறுதிக் கட்டத்தை இந்த நிகழ்ச்சி நெருங்கி இருக்கும் நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சௌந்தர்யாவைப் பார்க்க பிக் பஸ் விஷ்ணு வந்திருந்தார்.
சௌந்தர்யா விஷ்ணுவுக்கு ப்ரொபோஸ் செய்த காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் அருணைப் பார்க்க அர்ச்சனா வந்திருக்கிறார். ‘நான் உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன் என்று அருண் சொல்ல, அர்ச்சனாவும் நானும் உங்களை மிஸ் செய்தேன்’ என்கிறார். ‘ஹார்லி குயின் என்று நிறைய டைம் சொல்லி இருக்கிறேன்.
அது யாரும் இல்லை அர்ச்சனாதான்’என்று அருண் ஹவுஸ்மேட்ஸிடம் அறிமுகப்படுத்துகிறார். இந்த வீட்டில் உன்னோடு இருப்பேன் என்று நான் எதிர்பார்த்தது இல்ல. இப்ப நீ எப்படி இருக்கியோ அது நல்லா இருக்கு.
ஆனா உன் மேல உனக்கு இல்லாத நம்பிக்கைதான் உன்னை கீழக்கொண்டுவருது. யாரு என்ன சொன்னாலும் ‘You Always My Hero’ என்று சொல்லி அருணுக்காக ஒரு பாடலையும் பாடுகிறார்.