BSNL Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி நெட்வொர்கை விரிவுபடுத்துதல் மற்றும் 5ஜி சேவைகளை அறிமுகம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதிலும் நிறுவனம் தீவிரமாக உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜூலை மாதத்தில் தங்கள் கட்டணங்களை அதிகரித்த பிறகு மக்கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பினர், ஏனெனில், அவர்களிடம் தற்போது மலிவான திட்டங்கள் உள்ளன. மக்கள் ஆர்வம் காட்டியதால், பிஎஸ்என்எல் 5ஜி சேவைகளை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தங்களை தீவிரப்படுத்தியது. தற்போது BSNL புத்தாண்டு சலுகையை கொண்டு வந்துள்ளது.
பிஎஸ்என்எல் ரூ 277 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் பண்டிகை கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டத்திற்கான கட்டணம் ரூ.277. இதில் பயனர் 60 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவார். இது தவிர 120ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது தினமும் 2ஜிபி டேட்டா. இந்த ஆஃபர் ஜனவரி 16 வரை மட்டுமே. பிஎஸ்என்எல் தகவல் X தளத்தில் பதிவிட்டு தகவலைப் பகிர்ந்துள்ளது.
2025 ஆண்டில் BSNL 5ஜி சேவை
2025 ஆம் ஆண்டில் BSNL 5G சேவை தொடங்கும், இதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு டிசிஎஸ் தலைமை இயக்க அதிகாரி என். கணபதி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மே 2025 க்குள் ஒரு லட்சம் இடங்களில் 4G நெட்வொர்க்கை பிஎஸ்என்எல் தொடங்கும் என்று கூறியிருந்தார். இதற்குப் பிறகு, ஜூன் 2025 இல் 5G நெட்வொர்க் தொடங்கும்.
குறித்த காலத்துக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும்
பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவைகள் சரியான நேரத்தில் தொடங்கும் என்று டிசிஎஸ் உறுதி செய்துள்ளது. அதிவேக இணையத்திற்காக காத்திருந்த மில்லியன் கணக்கான பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருவதாகவும், குறித்த காலத்துக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என்றும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) சமீபத்தில் IFTV (Intranet Fiber TV) சேவையைத் தொடங்கியது. இது தவிர, நிறுவனம் BiTV சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் 300க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை முற்றிலும் இலவசமாகப் பார்க்கலாம். இது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடும் சவாலை கொடுக்கும்.
தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல்லின் நுகர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) டிசம்பர் 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பிஎஸ்என்எல் கடந்த அக்டோபர் மாதத்தில் 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.