Rishabh Pant : 'Stupid…Stupid…Stupid' – பன்ட்-ஐ கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்!

பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்பர்னில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ரிஷப் பண்ட் தாறுமாறாக ஒரு ஷாட்டை ஆடி அவுட் ஆகியிருந்தார். அப்போது கமெண்ட்ரி பாக்ஸில் இருந்த முன்னாள் வீரர் கவாஸ்கர் பண்ட்டை ‘Stupid…Stupid…Stupid..’ என கடுமையாக விமர்சித்தார்.

Pant

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டர்கள் கடுமையாக சொதப்பியிருந்தனர். நேற்றைய நாளின் முடிவில் 164-5 என்ற பரிதாப நிலையில் இந்திய அணி இருந்தது. ஜடேஜாவும் பண்ட்டும் க்ரீஸில் நின்றனர். இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்கவே போராட வேண்டிய நிலை இருந்தது. ஜடேஜாவும் பன்ட்டும் கொஞ்சம் நேரம் நின்று ஆடியிருந்தனர். ஆனால், ரிஷப் பன்ட் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கன்னாபின்னாவென ஒரு ஷாட்டை ஆடி அவுட் ஆகினார். விழுந்து புரண்டு பைன் ஸ்கூப் ஆடி பைன் லெக்கில் பவுண்டரி அடிப்பது பண்ட்டின் வழக்கம். போலண்ட் வீசிய ஓவரில் முதலில் அப்படி ஒரு ஷாட்டுக்கு பண்ட் முயற்சி செய்திருந்தார். ஆனால், அது க்ளிக் ஆகவில்லை. மீண்டும் அதே ஓவரில் அப்படி ஒரு ஷாட்டை ஆடினார். ஆனால், பைன் லெக்கை குறிவைத்து அவர் ஷாட் ஆட பந்து தேர்டு மேனுக்கு பறந்தது. தேர்டு மேனில் டீப்பில் நின்ற லயன் கேட்ச் பிடிக்க 28 ரன்களில் அவுட் ஆனார்

அந்த சமயத்தில் கமெண்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டிருந்த கவாஸ்கர், ‘Stupid…Stupid…Stupid…’ என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு, ‘இது ஒரு Stupid ஆன ஷாட். அணியின் நிலைமையை புரியாமல் ஆடியிருக்கிறார். இந்திய அணி இப்போது இருக்கும் சூழலில் இப்படி ஒரு ஷாட்டை ஆடியா விக்கெட்டை பறிகொடுப்பது. நீங்கள் உங்களின் விக்கெட்டை அவர்களின் கையில் தூக்கி கொடுத்திருக்கிறீர்கள். இதுதான் என்னுடைய இயல்பான ஆட்டம் என தயவு செய்து சொல்லாதீர்கள். இது உங்களின் இயல்பான ஆட்டம் அல்ல.’ என கடுமையாக விமர்சித்திருந்தார்.

Pant

ரிஷப் பண்டை பற்றிய கவாஸ்கரின் விமர்சனம் குறித்த உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.