Vijay Antony: `கடைசி நேர மாற்றத்திற்காக மன்னிப்பு கோருகிறேன்' – விஜய் ஆண்டனி கான்சர்ட் தள்ளி வைப்பு

`விஜய் ஆண்டனி 3.0′ கான்சர்ட் இன்று நடைபெறவிருந்தது.

இதற்கு முன்பே வெவ்வேறு பகுதிகளில் கன்சர்ட் நடைபெற்றிருந்தது. விஜய் ஆண்டனியின் அந்த கான்சர்ட்டின் காணொளிகளும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக பரவியது.

`விஜய் ஆண்டனி 2.0′ கான்சர்ட் கடந்தாண்டு நடைபெற்றதை தொடர்ந்து `விஜய் ஆண்டனி 3.0′ கான்சர்ட் இன்று மீனம்பாக்கத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் சில சூழல்களால் அந்த கான்சர்ட் தற்போது தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

Vijay Antony’s Social Media Post

இதுகுறித்து பதிவிட்டிருக்கும் விஜய் ஆண்டனி, “ எதிர்பார்க்காத சில விஷயங்களாலும், அதிகாரிகளின் ஆலோசனையின்படி தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இன்று நடைபெறவிருந்த `விஜய் ஆண்டனி 3.0′ கான்சர்ட் தள்ளி வைக்கப்படுகிறது. கடைசி நேர மாற்றத்திற்காகவும், இதனால் ஏற்படும் சிரமத்திற்கும் மன்னிப்பை கோருகிறேன். கான்சர்ட் நடைபெறவிருக்கும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.