ஆரையா,
உத்தர பிரதேசத்தில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை தந்தை, தாத்தா மற்றும் மாமா ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியான அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.
அந்த சிறுமி உறவுக்கார பெண் ஒருவருடன் பிதுனா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதுபற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு அலோக் மிஷ்ரா நிருபர்களிடம் கூறும்போது, சிறுமி அளித்த புகாரில், பல மாதங்களாக மேற்குறிப்பிட்ட 3 பேரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டதில், சிறுமி 2 மாதம் கர்ப்பம் என்பது தெரிய வந்துள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து பல்வேறு பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்பின்னர் அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.