ஐதராபாத்,
13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் ஜெக்சன் சிங் ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஐதராபாத் அணி சார்பில் மனோஜ் முகமது 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. இதையடுத்து ஐதராபாத் எப்.சி. – ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.