Vodafone Idea Budget Recharge Plans: இந்தியாவில் தற்போது நான்கு நிறுவனங்கள் மட்டுமே தொலைத்தொடர்பு துறையில் மொபைல் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களுடன், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் மொபைல் தொலைத்தொடர்பு சேவையில் இயங்கி வருகின்றன. இதில் ஏர்டெல் நிறுவனமே இந்த துறையில் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. மேலும், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் இணைந்து தற்போது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவையை வழங்கி வருகிறது.
ஏர்டெல் நிறுவனம் கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்தும், பிஎஸ்என்எல் நிறுவனம் 2000ஆம் ஆண்டில் இருந்தும், ஜியோ நிறுவனம் 2016ஆம் ஆண்டில் இருந்தும், வோடபோன் ஐடியா நிறுவனம் 2018ஆம் ஆண்டில் இருந்தும் மொபைல் சேவையில் இயங்கி வருகின்றன. இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டில் இருந்து 5ஜி இணைய சேவையை வழங்கி வருகின்றன. வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது 5ஜி சேவைக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கி உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது.
வோடபோன் ஐடியாவின் பட்ஜெட் திட்டங்கள்
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அளவில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இருப்பினும் தினமும் 2ஜிபி டேட்டா கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 5ஜி சேவையை ஜியோ வரம்பற்ற வகையில் வழங்கி வருகிறது. தொடக்கத்தில் 5ஜி ஸ்மார்ட்போனை கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களும் இந்நிறுவனங்கள் வரம்பற்ற வகையில் 5ஜி டேட்டாவை வழங்கியது.
தற்போது வோடபோன் ஐடியா 5ஜி சேவையை மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே வோடபோன் வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் பல்வேறு நகரங்களில் வோடபோன் ஐடியா 5ஜி சேவையை கொண்டுவரும் என்பதால் பலரும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மீதும் அதிகம் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். இந்நிலையில் அந்நிறுவனம் சமீபத்தில் கொண்டு வந்த 2 பட்ஜெட் ரீசார்ஜ் திட்டங்களை இங்கு காணலாம். இந்த திட்டங்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரூ.138 பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாள்கள் ஆகும். இந்த பிளானில் 100MB டேட்டா கிடைக்கும். அதுமட்டுமின்றி, இரவில் 10 லோக்கல் ஆன்-நெட் இரவு நிமிடங்கள் கிடைக்கும். இரவு 11 மணிமுதல் அதிகாலை 6 மணிவரை இந்த நைட் நிமிடங்களை நீங்கள் பயன்படுத்தலாம். லோக்கல் கால் அல்லது சர்வதேச கால் பேச ஒரு நொடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படுகிறது.
ரூ.128 பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாள்கள் ஆகும். இதில் 100MB டேட்டா கிடைக்கும். நீங்கள் லோக்கல் கால் அல்லது சர்வதேச கால் பேச ஒரு நொடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படுகிறது. இரவில் 10 லோக்கல் ஆன்-நெட் இரவு நிமிடங்கள் கிடைக்கும். இரவு 11 மணிமுதல் அதிகாலை 6 மணிவரை இந்த நைட் நிமிடங்களை பயன்டுத்தலாம்.