டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தா வழங்கும்… சில சூப்பர் ரீசார்ஜ் பிளான்கள்

இன்றைய காலகட்டத்தில், மொபைல் டேட்டா மற்றும் பொழுதுபோக்கின் தேவைகள், ஆகிய இரண்டையும் ஒன்றாக பூர்த்தி செய்யும் ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பிரபலமான OTT சேனல்களுக்கு, ​​ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் பல திட்டங்களை வழங்கி வருகின்றன. இதில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனம் உங்களுக்காக மலிவான கட்டணத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய திட்டத்தை வழங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஜியோவின் டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டம்

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு காலாண்டு ரீசார்ஜ் திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டம் பொழுதுபோக்கு பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

₹949 ரீசார்ஜ் திட்ட விபரம்

வேலிடிட்டி- 84 நாட்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா + ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 3 மாதங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தா.

ஏர்டெல்லின் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டம்

ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவை சேர்த்துள்ளது. அதிவேக டேட்டா மற்றும் தடையில்லா பொழுதுபோக்கை விரும்பும் பயனர்களுக்கு இந்தத் திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

₹499 ரீசார்ஜ் திட்ட விபரம்

வேலிடிட்டி காலம்- 28 நாட்கள், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு 28 நாட்கள் இலவச சந்தா.

₹1,029 ரீசார்ஜ் திட்ட விபரம்

வேலிடிட்டி காலம்- 84 நாட்கள், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு 3 மாதங்கள் இலவச அணுகல்.

₹3,999 ரீசார்ஜ் திட்ட விபரம்

வேலிடிட்டி காலம் – 365 நாட்கள், ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 1 வருடத்திற்கு இலவசம்.

பிஎஸ்என்எல்லின் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டம்

அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமும் தன் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. இதற்கு பிஎஸ்என்எல் சூப்பர் ஸ்டார் 300 திட்டத்தில் ரீசர்ஜ் செய்ய வேண்டும்.

சூப்பர் ஸ்டார் 300 திட்டம்

சூப்பர் ஸ்டார் 300 திட்டம் BSNL இன் பிராட்பேண்ட் இணைய சேவையாகும். இந்த திட்டத்தின் மாத கட்டணம் 749 ரூபாய். 1 வருடத்திற்கான கட்டணத்தை முதலிலேயே செலுத்தினார்.. இதன் கீழ், ரூ.8,988க்கு பதிலாக ரூ.8,239 மட்டுமே செலுத்தி இந்த திட்டத்தை ஒரு வருடம் முழுவதும் அனுபவிக்க முடியும். திட்டத்தை ஆக்டிவேட் செய்த பிறகு, உங்கள் தொலைபேசி எண் மற்றும் OTP மூலம் Disney+ Hotstar ஆப்ஸ் அல்லது இணையதளத்தில் உள்நுழையவும். இதற்குப் பிறகு நீங்கள் பிரீமியம் உள்ளடக்கத்தை அனுபவிக்கத் தொடங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.