சென்னை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் தொழில்நுட்பம் மூலம் தனிநபரை அச்சுறுத்துவதும் பயங்கரவாதம்தான் என்று தெரிவித்துள்ளார். நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஓய்வுபெற்ற தமிழக காவல்துறை ஏ.ஐ.ஜி. ரவி சேகரன் எழுதிய ‘சைபர் கிரைம் சவால்களும் எச்சரிக்கைகளும்’ என்ற நூல் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ, “சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். […]