குலசேகரம் முதல்வர் மு க ஸ்டாலின் போஸ்டர் மீது ஒரு மூதாட்டி கல் வீசும் வீடியோவை பரப்பிய கன்னியாகுமரி மாவட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் சென்னையில் உள்ள ஒரு மேம்பால சுவரில் ஒட்டப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அடங்கிய சுவரொட்டி மீது மூதாட்டி ஒருவர் கல்வீசுவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஆர்.கே.நகர் காவல்துறையினரிடம் அளிக்கபட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அந்த வீடியோவை […]