IND vs AUS: WTC பைனலுக்கு செல்ல இன்னும் வாய்ப்பு? இந்தியாவிற்கு இருக்கும் ஒரே சவால்!

கடந்த வெள்ளிக்கிழமை மெல்போர்னில் தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்ஸில் அபாரமாக விளையாடியது. இரண்டு அணிகளுக்கும் முக்கியமான இந்த 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. இது இந்திய அணியின் பேட்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பிறகு 8வது இடத்தில் களமிறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் 9வது இடத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி அணியை மோசமான சரிவிலிருந்து மீட்டனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்த நிதிஷ்குமார் ரெட்டி 114 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் அடித்தது. 116 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி முடிய, இரண்டு நாட்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில், அதிகபட்சம் டிராவில் முடிய வாய்ப்பு உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி பார்ப்போம்.

– Sacrificed his job.
– Retired 25 years early.
– Gave his full attention to Nitish Kumar Reddy.
– Took him to training and gave all the facilities he could despite financial conditions.

THIS IS HOW A PROUD FATHER LOOKS LIKE WHEN HIS DREAMS TURNS INTO A REALITY…!!! pic.twitter.com/uc5hnjAtC3

— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 28, 2024

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியும், மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் WTC இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறலாம். ஆனால் தற்போது நடந்து வரும் நான்காவது டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் அல்லது ட்ராவில் முடிந்தாலும் WTC பைனலுக்கு தகுதி பெறுவது இந்திய அணி கையில் இல்லை. தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் போட்டியின் முடிவு, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்க உள்ள டெஸ்ட் போட்டியின் முடிவை இந்திய அணி எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.

THE QUALIFICATION SCENARIO FOR TEAM INDIA IN WTC FINAL.

– The dream to Lord’s is still alive  pic.twitter.com/CR3J103HYg

— Johns. (@CricCrazyJohns) December 28, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.