கனடா: தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீ – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 80 பயணிகள்

ஒட்டாவா,

கனடாவின் ஹாலிபேக்ஸ் விமானநிலையத்தில் ‘ஏர் கனடா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் 80 பயணிகளுடன் தரையிறங்கியது. ஆனால் விமானம் தரையிறங்கும்போது அதன் லேண்டிங் கியரில் பழுது ஏற்பட்டது. இதனால் இறக்கை பகுதி ஓடுபாதையில் உரசி, விமானத்தல் திடீரென தீ பற்றியது.

விமானத்தில் தீ பற்றியதை பார்த்த பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர். இதற்கிடையில் விமான நிலைய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 80 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. முன்னதாக தென்கொரியாவில் விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் கனடாவில் விமான விபத்து நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.