நீரதிகாரம்: ஹலோ ஃஎப்.எம். வழங்கும் கிரீடம் விருதினை வென்ற 'நீரதிகாரம்' நாவல்

விகடன் பிரசுரமாக வெளியான `நீரதிகாரம்’ தமிழ் நாவல் தொடராக விகடனில் வெளிவந்த போதே வாசகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று பாராட்டுகளைக் குவித்தது.

பென்னி குயிக் கட்டிய ‘முல்லைப் பெரியாறு’ அணை கட்டப்பட்ட வரலாறு, மதுரையின் தாது வருடப் பஞ்சத்தால் மக்கள் மடிந்த துயரம் உள்ளிட்டவற்றைப் பல தரவுகளுடன் ஆவணப்படுத்தியிருக்கிறது இந்நாவல். இந்த பெரும் வரலாற்றுப் பணியை செங்கோட்டை, கம்பம் என ஆரம்பித்து லண்டன் வரை சென்று தரவுகள் திரட்டி ஆவணப்படுத்தியிருக்கிறார் இதன் ஆசிரியர் அ.வெண்ணிலா. இந்நாவலில் ‘முல்லைப் பெரியாறு’ அணையை மீண்டும் ஒவ்வொரு அத்தியாயங்களாக எடுத்துக் கட்டி, வரலாற்றைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார். ஆசிரியர் அ.வெண்ணிலாவின் உழைப்பும், பொறுப்பும், இலக்கிய ஆளுமையையும் நாவலின் ஒவ்வொரு எழுத்திலும் செந்நீராகப் பாய்ந்துள்ளது.

நீரதிகாரம் நாவல்
நீரதிகாரம் நாவல்

இந்நிலையில் ஆண்டுதோறும் ஹலோ ஃஎப்.எம். வழங்கும் கிரீடம் விருதினை ‘நீரதிகாரம்’ நாவல் பெற்றிருக்கிறது. நர்சிம் எழுதிய ‘பஃறுளி’, பா.ராகவனின் ‘வட கொரியா பிரைவேட் லிமிடெட்’, ஹரிஹரசுதன் தங்கவேலுவின் ‘AI எனும் ஏழாம் அறிவு’, நரனின் ‘வேட்டை நாய்கள்’, என் ஸ்ரீராமின் ‘மாயாதீதம்’, சக.முத்துக்கண்ணன் & ச.முத்துக்குமாரி எழுதிய ‘No சொல்லுங்க’ ஆகிய நூல்களுடன் ‘நீரதிகாரமும்’ இவ்விருத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இவற்றில் வாசகர்களின் பேரளவிலான வாக்கெடுப்பில் ‘நீரதிகாரம்’ முதலிடத்தைப் பெற்று கீரிடம் சூடியிருக்கிறது.

2025 ஆம் ஆண்டை எதிர்கொள்ள வாசகர்கள் அனுப்பிய பூங்கொத்தாய் ஹலோ ஃஎப்.எம்- மின் இவ்விருது வந்து சேர்ந்திருக்கிறது. வாசகர்களுக்குப் பேரன்பும் மகிழ்ச்சியும். Hello FM க்கு நன்றி.

இப்போது ‘நீரதிகாரம்’ நாவலை விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாகவும் கேட்கலாம். ஆசிரியர் அ.வெண்ணிலா அவர்களே கூடுதல் தகவல்களுடன், விரிவாகத் தன் குரலில் இந்நாவலை ஒலிவடிவமாக வழங்கி இருக்கிறார்.

வாங்க…. ஆசிரியர் அ.வெண்ணிலாவுடன் ‘முல்லைப் பெரியாறு’ அணை கட்டப்படுவதை அருகில் நின்று பார்க்கலாம். ஆடியோ அலையில் சுழன்று அணைக்கட்டப்பட்ட காலத்திற்குச் செல்லலாம்.

https://bit.ly/Neerathikaaram

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.