கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவிற்கு உள்ளானது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். பலரும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர், ‘யார் அந்த சார்?’ என்ற பதாகைகள் ஏந்தி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதையொட்டி, அதிமுகவினரை பாராட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “சாமானிய மக்களை பாதிக்கும் ஒரு விஷயத்தில் குரல் கொடுக்கும்போது, நாம் தான் வெளியே தெரிய வேண்டும் என்று நினைக்கும் அரசியலில் கூடாது. இந்த சம்பவத்தை கையிலெடுத்து முக்கியமான கேள்வியைக் கேட்ட அதிமுகவினருக்கு பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.