ரிலையன்ஸ் ஜியோ… தினம் 2.5GB டேட்டா வழங்கும் சில மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்

Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், கட்டணங்களை உயர்த்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான மலிவான பல திட்டங்கள்பலவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர் என்பதையும் மறுக்க இயலாது. அதோடு சிறந்த நெட்வொர்க் கவரேஜ் உள்ளதால், வாடிக்கையாளர்கள் பலர் இன்னும் ஜியோவை விட்டு விலகாமல் உள்ளனர். இந்நிலையில், தின 2 ஜிபி முதல் 2.5 ஜிபி வரை டேட்டா வழங்கும் சில சிறந்த மலிவான திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.

ஜியோவின் சிறந்த 5 ரீசார்ஜ் திட்டங்கள் வெவ்வேறு வேலிடிட்டி மற்றும் டேட்டா பலன்களை வழங்குகின்றன. 

ஜியோவின் ரூ.349 திட்டம் (Jio Rs.349 Plan Details)

ஜியோவின் (Reliance Jio) ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். இந்த திட்டத்தில் நீங்கள் 5G வரம்பற்ற டேட்டாவின் பலனைப் பெறுவீர்கள். இதில் தினமும் 2ஜிபி டேட்டா பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இது தவிர, வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ் எம் எஸ், JioCinema, JioTV மற்றும் JioCloud ஆகியவற்றின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள்.

ஜியோவின் ரூ.899 திட்டம் (Jio Rs.899 Plan Details)

ஜியோவின் ரூ.899 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர 20ஜிபி கூடுதல் டேட்டாவும் கிடைக்கும். இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ், JioCinema, JioTV மற்றும் JioCloud ஆகியவற்றின் இலவச  சந்தா கிடைக்கிறது.

ஜியோவின் ரூ.999 திட்டம்  (Jio Rs.999 Plan Details)

ஜியோவின் ரூ.899 திட்டத்தில் திட்டம், 98 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.  தினமும் 2 ஜிபி  டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு, 100 SMS/நாள், JioCinema, JioTV மற்றும் JioCloudக்கான இலவச அணுகல் கிடைக்கிறது.

ஜியோவின் ரூ.2,025  திட்டம் (Jio Rs.2,025 Plan Details)

ஜியோவின் ரூ.2,025  திட்டதில் ரீசார்ஜ் செய்தால் 200 நாட்கள் கவலையின்று இருக்கலாம்.  இந்த திட்டத்தில் 200 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். தினமும் 2.5 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இதில் நீங்கள் புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய பல நன்மைகளைப் பெறுவீர்கள். வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். OTT சந்தாவின் நன்மையும் உள்ளது.  இதில் நீங்கள் JioCinema, JioTV மற்றும் JioCloud ஆகியவற்றின் இலவச சந்தாவைப் பெறலாம்.

ஜியோவின் 3,599 திட்டம் (Jio Rs.3,599 Plan Details)

ஜியோவின் 3,599 ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், ஒரு வருடத்திற்கு கவலை இல்லை. இதனால், மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் தொந்தரவிலிருந்து விடுபடலாம். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் தினமும் 2.5ஜிபி டேட்டாவின் பலனைப் பெறலாம். வரம்பற்ற அழைப்பு, 100 SMS/நாள் மற்றும் JioCinema, JioTV மற்றும் JioCloud ஆகியவற்றின் சந்தாக்கள் கிடைக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.