சென்னை: சென்னையில் தொழில் வரி 35% உயர்த்தப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திட்டம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் தொழில் வரி 35% உயர்த்தப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம், இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது என்று கூறியதுடன், இதுதொடர்பாக […]