Anurag Kashyap: “பாலிவுட்டை எண்ணி அருவருப்பாக உணர்கிறேன்!'' – அனுராக் காஷ்யப் காட்டம்

சமீப நாட்களாக நடிகர் அவதாரத்தில் அனுராக் காஷ்யப்பை தென்னிந்திய சினிமாவில் அதிகமாகப் பார்க்க முடிகிறது.

இந்தாண்டு இவர் நடிப்பில் தமிழில் `மகாராஜா’, `விடுதலை 2′ , மலையாளத்தில் `ரைஃபிள் க்ளப்’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் இந்திய பதிப்பிற்கு கொடுத்த நேர்காணலில் பாலிவுட் குறித்த அவரின் எண்ணத்தைப் பகிர்ந்திருக்கிறார். இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்தப் பேட்டியில் அவர், “இப்போது பணம் அதிகமாக செலவாகும் விஷயங்களுக்கு முயற்சி எடுப்பது எனக்கு கடினமாக இருக்கிறது. அந்த முயற்சியினால் கிடைக்கும் லாபம் குறித்து என்னுடைய தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். ஒரு படத்தை தொடங்குவதற்கு முன்பே, அத்திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்வது என்றுதான் கவனம் செலுத்துகிறார்கள். இது திரைப்படங்களை இயக்கும்போது கிடைக்கிற மகிழ்ச்சியை உறிஞ்சு வெளியே எடுக்கிறது. அதனால்தான் நான் அடுத்த வருடம் (2025) மும்பையிலிருந்து வெளியேறி தென்னிந்தியாவுக்கு செல்லவிருக்கிறேன்.

Anurag Kashyap

நான் என்னுடைய சினிமா துறையை எண்ணி ( பாலிவுட்) ஏமாற்றமடைகிறேன். அதுமட்டுமல்ல, அருவருப்பாகவும் உணர்கிறேன். `மஞ்சும்மல் பாய்ஸ்’ போன்ற சினிமா இந்தியில் வராது. ஆனால், அதை ரீமேக் செய்ய மட்டும் முற்படுவார்கள். இங்கு எதையும் முயற்சி செய்து பார்ப்பதற்கு எண்ணமில்லை. ஆனால், மக்களுக்கு ஏற்கெனவே பிடித்த விஷயங்களை வைத்து திரைப்படத்தை தொடர்ந்து எடுக்கிறார்கள். இதுதான் இங்குள்ளவர்களின் எண்ணமாக இருக்கிறது. அந்த எண்ணத்தை எண்ணி அருவருப்பாக உணர்கிறேன்.” எனக் கூறினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.