கன்னியாகுமரியில் கடலில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நேற்று வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், சிலையின் நுழைவுவாயிலில் ‘பேரறிவு சிலை’ (Statue of Wisdom) என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்து வைத்து, வெள்ளி விழா நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து. கடல் நடுவே விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் வரிகளில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் `வள்ளுவமாலை’ பாடலை, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, அவ்விருவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…